முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: வரும் திங்கட்கிழமை வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் வரும் திங்கட்கிழமை வரை அவையை ஒத்திவைத்து வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பல்வேறு விவகாரங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், விவாதங்கள் நடைபெறாமல் அடிக்கடி சபை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் மாநிலங்களவையில் கூட்டம் தொடங்கியது. இதில், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட், லக்கிம்பூர் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், "மாநிலங்களவை வழக்கம்போல் செயல்பட தயவு செய்து ஒருமித்த கருத்துக்கு வரவும். இரு தரப்பினரும் நேருக்கு நேர் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். அதற்கு உதவும் வகையில் திங்கட்கிழமை கூடுவதற்கு அவையை ஒத்திவைக்கிறேன் " என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து