முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை அண்ணாமலை திட்டவட்டம்: அண்ணாமலை

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒரே கூட்டணியில் உள்ளன. எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை. எந்த குழப்பமும் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

நாமக்கல் பொம்மைகுட்டைமேட்டில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒரே கூட்டணியில் உள்ளன. எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை. எந்த குழப்பமும் இல்லை. மத்திய அரசு தமிழகத்தில் நன்றாக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு விருது வழங்கி வருகிறது. ஆனால் அமைச்சர்கள் நாங்கள்தான் செய்தோம் என பெருமை பாராட்டி வருகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மாநில அரசு புதிய திட்டங்களை கண்டுபிடித்து செயல்படுத்தினால் தான் மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் எந்தவித மக்கள் நலன் சார்ந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.  தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடித்து செயல்படுத்தி வருகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்துவது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் கருத்து சொன்னால் தான் சரியாக இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!