முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அதிபர் நினைவுதினம்: நாட்டு மக்கள் சிரிப்பதற்கு வட கொரிய அரசு தடை

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்- உன் முடிவு செய்துள்ளார். இதனால் 11 நாட்களுக்கு அந்நாட்டு மக்கள் யாரும் சிரிக்கவும், மது அருந்தவும், கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்கவும் கூடாது என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அனைவரும் எந்தவித கேளிக்கை, கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது. வீடுகளில் யாராவது இறந்தாலும் கூட சத்தம் போட்டு அழக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு உடனே கைது செய்யப்படுவர் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து