முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி செலுத்தாவிட்டால் குளிர் காலங்களில் உயிரிழக்க நேரிடும்: அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இனி வரும் குளிர் காலங்களில் உயிரிழக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் ஏற்கனவே அமெரிக்காவில் கால்பதித்து விட்டது. அதோடு அது வேகமாகவும் பரவி வருகிறது.

இந்த வைரஸ் அமெரிக்காவில் நுழைவதற்கு முன்பு, அது குறித்து நாட்டு மக்களிடம் பேசிய போது ஒமைக்ரான் வைரசை கண்டு அஞ்ச வேண்டாம், அதோடு அதற்காக ஊரடங்கை விதிப்பதோ அல்லது பயண கட்டுப்பாடுகளை நீட்டிப்பதோ அவசியம் இல்லை என ஜோ பைடன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உயர்ந்து வருவதால் , ஜனாதிபதி ஜோ பைடன் பயண கட்டுப்பாடுகளை கடுமையாக்கி கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.  புதிய விதிமுறைகளின் படி வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட அமெரிக்கா புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் ஜோ பைடன் நேற்று தெரிவித்துள்ளதாவது, 

அமெரிக்காவில் ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருப்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இனி வரும் குளிர் காலங்களில் உயிரிழக்க நேரிடும்.  அனைவரும்  தடுப்பூசி செலுத்தி கொண்டால்தான் நாம் நமது பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் . நாம் நமது தொழில் , மற்றும் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து