முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாட்களில் பவுன் ரூ.632 உயர்ந்தது: தங்கம் விலை அதிரடி உயர்வு

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      வர்த்தகம்
Image Unavailable

தங்கம் விலை கடந்த மாதம் தீபாவளிக்கு பிறகு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,515க்கும், பவுன் ரூ.36,120க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,545க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36,360க்கும் விற்கப்பட்டது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் தங்கம் விலை மாலையில் மேலும் அதிகரித்தது. மாலையில் கிராமுக்கு மேலும் ரூ.11 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,556க்கும், பவுனுக்கு ரூ.88 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36,448க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையுடன் ஓப்பிடும் போது கிராமுக்கு ரூ.41 அதிகரித்து காணப்பட்டது.

பவுன் ரூ.328 அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று காலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. நேற்று காலையில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,594க்கும், பவுனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36,752க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் பவுன் ரூ.632 அதிகரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து