முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துக்களுக்கு தனி மயானம்: பிரிட்டன் அரசு அனுமதி

சனிக்கிழமை, 18 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : பிரிட்டனில் இந்துக்களுக்கான தனி மயானம் அமைக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

பிரிட்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பக்கிங்ஹாம்ஷையரில் நவீன வசதிகளுடன் இந்துக்களுக்கான ஒரு தனிப்பட்ட மயானம் அமைக்க முடிவானது. அனுாபம் மிஷன் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் அருகே மயானம் அமைக்க அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் அதற்கான அனுமதியை பிரிட்டனின் திட்டமிடல் துறை வழங்கி உள்ளது. இதையடுத்து காத்திருப்பு அறை, தகன மண்டபம், சடங்குகள் அறை, குளியல் அறை, விழா மண்டபம் உள்ளிட்டவற்றுடன் ஹிந்துக்களுக்கான தனி மாயனம் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அனுாபம் தொண்டு நிறுவன ஆன்மிக தலைவர் பரம் புயா சாஹேப்ஜி கூறுகையில், 

இந்து சம்பிரதாயங்களின்படி இறுதி சடங்குகள் செய்வது ஆன்மாவிற்கு விடுதலை அளிப்பதற்கான அடிப்படை விஷயம். இதனால் இறந்தவர் குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்கிறது.டென்ஹாமில் உள்ள எங்கள் மைதானத்தில் இந்த சேவையை வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க உள்ளோம். மயானம் அமைக்கும் பணிகளில் அனைத்து ஹிந்து அமைப்பினரும் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து