முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பயங்கரம் : மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவர்கள் 4 பேர் பரிதாப பலி

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் வைரலாகி வரும் டிக்டாக் சேலஞ்ஜ் மூலம் பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

கடந்த 2016-ம் ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டிக்டாக் ஆப்,  சில மாதங்களிலேயே உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. இது அடுத்த கட்டமாக டிக்டாக்  சேலஞ்ஜ் என்ற பெயரில் மேலும் பிரபலமாகியது. அதாவது ஒருவர் செய்து பதிவேற்றும் வீடியோ போன்றே அதே பார்ப்பவர்களும் செய்ய தொடங்கினர். நடனத்தில் தொடங்கிய இந்த டிக்டாக்  சேலஞ்ஜ் பின்னர் அபாயகரமான ஒன்றாக உருவெடுத்தது. 

இந்த நிலையில் அமெரிக்காவின் மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அந்த துப்பாக்கிசூட்டை நடத்தியது அந்த பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன். இந்த சம்பவத்தில் 4 மாணவர்கள் பலியாகினர். மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து போலீசார் பள்ளிகளில் நடத்திய அதிரடி நடவடிக்கைளில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது டிக்டாக்  ஆப்-பில் பள்ளிகளில் மாணவர்கள்  பிற மாணவர்களை சுடும் சேலஞ்ஜ் வைரலாகி வருவதாக தெரியவந்துள்ளது. இது குறித்த வீடியோக்களை பார்த்தே அந்த மாணவனும் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.  இது குறித்து டிக்டாக் நிறுவனம் , அவ்வாறு எந்த ஒரு சேலஞ்களும் பரவவில்லை என மறுத்துள்ளது. தற்போது அமெரிக்காவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து