முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப். 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: தமிழகத்திற்கு 5 முக்கிய நலத்திட்டங்கள் தயார்?

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டைத் தயார் செய்வதில் மும்முரமாக உள்ளார்.  இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழகத்திற்கான ஐந்து முக்கிய நலத் திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தயார் செய்துள்ளார். இதற்கு பிரதமரின் ஒப்புதல் தேவை. அவரும் நிச்சயம் சம்மதிப்பார் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த பட்ஜெட் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இருக்கும் என்றும் நிதித்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. பட்ஜெட் உரையில் தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டி படிப்பது நிர்மலா சீதாராமனின் வழக்கம். இந்த முறையும் அது உண்டாம்.  நிதித்துறை செயலராக இருப்பவர் டி.வி. சோமநாதன். இவர் தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. திருக்குறள், சிலப்பதிகாரம் உட்பட வேறு சில தமிழ் நுால்களிலிருந்தும் 20-க்கும் மேற்பட்ட மேற்கோள் குறிப்புகளை இவர் எடுத்து தயாராக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து