முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டத் தொடரின் 3-வது வாரத்தில் 10 மணி நேரம் மட்டுமே இயங்கிய பார்லி. மேலவை

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 3-வது வாரத்தில் மொத்தம் 10 மணி நேரம் 14 நிமிடங்களே மேலவை இயங்கியுள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.  கூட்டத்தொடர் வருகிற 23-ம் தேதி நிறைவடைகிறது.  இந்த சூழலில், புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு ஆகியவற்றுக்கு எதிரான அமளியால் இரு அவைகளின் நடவடிக்கைகள் முடங்கி போயின.

இந்த நிலையில், பாராளுமன்ற மேலவை செயலகம் வெளியிட்டுள்ள செய்தியில், 

முதல் மற்றும் 2-வது வாரத்தில் முறையே 49.70 சதவீதம் மற்றும் 52.50 சதவீதம் என்ற அளவில் அவை நடவடிக்கைகள் இருந்தன. எனினும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 3-வது வாரம் முடங்கியது.  இதனால், கூட்டத்தொடரின் 3-வது வாரத்தில் மொத்தம் 10 மணி நேரம் 14 நிமிடங்களே மேலவை இயங்கியுள்ளது.  மொத்தமுள்ள 27 மணிநேரம், 11 நிமிட அமர்வு நேரத்தில் 62.40 சதவீதம் வீணானது.

இதே போன்று, பட்டியலிடப்பட்ட மொத்தம் 75 கேள்விகளில் நான்கிற்கு மட்டுமே துறை சார்ந்த அமைச்சர்கள் வாய்வழியேயான பதில் அளித்துள்ளனர்.  அந்த வாரத்தில், கேள்வி நேரத்தில் 11.40 சதவீதம் அளவே பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று செயலகம் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து