முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் வளர்ச்சிக்கு இந்தியா உதவும் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

காபூல் : ஆப்கன் வளர்ச்சிக்கு இந்தியா உதவும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கஜகஸ்தான், தஜிகிஸ்தான், டர்க்மெனிஸ்டன், உஸ்பெகிஸ்தான், கியார்கஸ் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா ஆப்கானிஸ்தானில் ஒருங்கிணைந்த கூட்டாட்சி மலரவும், ஆப்கன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார ரீதியாக உதவும் என்று உறுதி அளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து