முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகில் மக்கள் குடியேற விரும்பும் நகரத்தில் துபாய்க்கு முதலிடம்

திங்கட்கிழமை, 20 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றியமைத்து கொள்ள விரும்பும் நகரங்களில் துபாய் நகரம் முதலிடத்தில் உள்ளது என இங்கிலாந்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:-

உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றிக் கொள்ள விரும்பினால் எந்த நகரங்களை தேர்வு செய்வார்கள்? என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வானது வெப்பநிலை, மழைப் பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை வைத்து நடத்தப்பட்டது.  இந்த ஆய்வின் அடிப்படையில் உலகிலேயே துபாய் நகரம் பொதுமக்கள் தாங்கள் குடியேற விரும்பும் முதல் நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் துபாய் நகரின் சராசரி வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியசில் இருந்து வருவதே ஆகும். இதேபோல் வருடத்தின் மழையளவு 68 மி.மீ ஆகும்.  இதனைத் தொடர்ந்து 2-வது இடமாக அமீரகத்தின் தலைநகர் அபுதாபி இருந்து வருகிறது. இங்கு சராசரி வெப்பநிலை 27.9 டிகிரி செல்சியஸ் ஆகவும், ஆண்டின் சராசரி மழையளவு 42 மி.மீ ஆகவும் இருக்கிறது.

ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட் நகரமானது உலகில் 5-வது இடத்தை வகிக்கிறது. இந்த நகரின் சராசரி வெப்பநிலை 27.30 டிகிரி செல்சியஸ் ஆகவும், வருட மழையளவு 100 மி.மீ ஆகவும் உள்ளது. மேலும் 3-வது இடத்தை பக்ரைன் நாட்டின் மனாமா நகர் பெற்றுள்ளது. வளைகுடா பகுதியில் உள்ள நகரங்களே பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றிக் கொள்ள விரும்பும் நகராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து