முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரான் பாதிப்பு: முதன்முறையாக அமெரிக்காவில் ஒருவர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 21 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதித்த நபர்களில் ஒருவர் முதன்முறையாக உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனாவின் உருமாற்றம் பெற்ற புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  போட்ஸ்வானா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது 89 நாடுகளுக்கும் கூடுதலாக பரவி உள்ளது.  மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

ஒரு சில நாடுகளில் ஒமைக்ரானால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், அமெரிக்காவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.  இதுபற்றி டெக்சாஸ் மாகாண சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில், 

50 வயது கொண்ட முன்பே கொரோனா பாதித்த நபர் ஒருவர் ஒமைக்ரான் பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளார்.  அவர் தடுப்பூசியும் செலுத்தி கொள்ளவில்லை.  உடல்நல பாதித்த நிலையிலும் காணப்பட்டார் என தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து