முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓமைக்ரான் பரவல்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய உலக சுகாதார அமைப்பு பரிந்துரை

செவ்வாய்க்கிழமை, 21 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

உலக நாடுகளில் ஓமைக்ரான் அதிவேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்யுமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. 

கொரோனாவின் உருமாறிய வைரஸான ஓமிக்ரான் டெல்டாவை விட பன்மடங்கு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் நோயில் இருந்து மீண்டவர்களும் கூட ஓமிக்ரான்  வைரசால் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.  இதனை கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு உலக நாடுகளுக்கு அவர் வலியுறுத்தி உள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு  கொண்டாட்டங்களை தள்ளி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம். வாழ்க்கையை இழப்பதை விட, நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது சிறந்தது. தற்போது கொண்டாடி விட்டு பிறகு வருத்தப்படுவதை  விட, தற்போது ஒத்தி வைத்து விட்டு பிறகு கொண்டாடலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து