முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு ரத்து மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளியால் நாள் முழுவதும் மக்களவை முடக்கம்

செவ்வாய்க்கிழமை, 21 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

நீட் தேர்வு ரத்து மசோதாவை நிறைவேற்றக் கோரி மக்களவையில் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாள் முழுவதும் அவை முடக்கின.

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29 முதல் நடைபெற்று வருகின்றன. இதில், பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் நேற்றைய கூட்டம் தொடங்கியவுடன் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பதாகைகளுடன் தி.மு.க எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, அவை பிற்பகல் 2 மணி  வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகலிலும் தி.மு.க எம்.பி.க்கள் அமளியை தொடர்ந்ததால் இன்று காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜிநாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற வளாகத்திலிருந்து விஜய் சவுக் வரை எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டனர்.

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொண்டது திட்டமிட்ட சதி எனவும், அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அஜய் மிஸ்ரா ராஜிநாமா செய்ய வேண்டும் என இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்ட வந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் பாராளுமன்ற வளாகத்திலிருந்து விஜய் சவுக் வரை பேரணி சென்றனர். இந்த பேரணியில் காங்கிரஸ், திமுக, சிவசேனை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து