முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரான் அச்சம்: 4-வது டோஸ் தடுப்பூசி போட இஸ்ரேல் முடிவு

புதன்கிழமை, 22 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் தாமதிக்காமல் உடனே பொதுமக்கள் அனைவரும் 4-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனாவால், உலகின் பிற எந்த நாட்டையும் விட வல்லரசு நாடான அமெரிக்காதான் கூடுதல் பாதிப்புக்கு ஆளானது. இப்போது தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டு உலகமெங்கும் கால் பதித்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலில் முதல் ஒமைக்ரான் பலி ஏற்பட்டுள்ளது. இறந்த 60 வயது நபர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஒமிக்ரான் உறுதியாகியிருந்தாலும், அவருக்கு இணை நோய்களும் இருந்ததால் ஒமிக்ரானால் இறந்தார் என உறுதியாக சொல்ல முடியாது என இஸ்ரேல் மருத்துவமனை தெரிவித்தது.

இந்த மரணத்திற்கு பின்னர் இஸ்ரேல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 4-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் 2 டோஸ் தடுப்பூசியை முன்கூட்டியே முடித்து 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் போட்டு விட்டது.

இதனால் தற்போது ஒமிக்ரான் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரதமர் நப்தாலி பென்னட் தாமதிக்காமல் உடனே அனைவரும் 4-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.  இதன் மூலம் 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முதல் நாடாக இஸ்ரேல் உருவெடுக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து