முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளை மாளிகைக்கு புதிய ஜெர்மன் ஷெப்பர்டு நாய் வருகை

புதன்கிழமை, 22 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வசிக்கும் வெள்ளை மாளிகைக்கு புதிய வரவாக கமாண்டர் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு நாய் வந்துள்ளது. 

ஜோ பைடன், சாம்ப், மேஜர் என்ற இரு ஜெர்மன் ஷெப்பர்டு நாய்களை வளர்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன், சாம்ப் மரணம் அடைந்தது. மேஜர் சிலரை கடித்து காயப்படுத்தியதால் அதற்கு பயிற்சி அளிக்க, டெலவர் மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பயிற்சி முடிந்து வந்த பிறகும் மேஜரின் குணம் மாறவில்லை. மீண்டும் சில 'கடி' சம்பவங்கள் நடந்தன. அதனால், மேஜர் நிரந்தரமாக நாய்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஜோபைடனுக்கு அவரது சகோதரர் ஜேம்ஸ் பைடன், மருமகள் சாரா பைடன் ஆகியோர் கமாண்டர் நாயை பரிசளித்துள்ளனர். பிறந்து மூன்றரை மாதமான கமாண்டர், வெள்ளை மாளிகைக்கு வந்ததை ஜோ பைடன் வீடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு விருப்பமான பூனைக் குட்டி ஒன்று, அடுத்த மாதம் வெள்ளை மாளிகைக்கு வர உள்ளது. கடந்த, 2020 நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது, வெள்ளை மாளிகைக்கு பூனைக்குட்டியை எடுத்து வர உள்ளதாக, ஜில் பைடன் தெரிவித்திருந்தார். ஓராண்டுக்குப் பின் அவரது ஆசை நிறைவேற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து