முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கொரோனா நிவாரண நிதியில் ஏழரை கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு

புதன்கிழமை, 22 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாசிங்டன் : அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதியில் நடைபெற்ற மிகப்பெரிய முறைகேடு அந்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 

பெருந்தொற்றால் வேலை இழந்த அமெரிக்க குடிமக்கள்  மற்றும் சிறுதொழில் அதிபர்களுக்கு அந்நாட்டு அரசு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் வேலை இழந்தவர்களுக்கு உதவித்தொகை அளிக்க பல லட்சம் கோடி ரூபாயை அமெரிக்க அரசு ஒதுக்கியது.

இந்நிலையில் பெருந்தொற்று நிவாரண நிதியில் நடைபெற்றுள்ள பெரும் முறைகேட்டினை USS என்று அழைக்கப்படும் அமெரிக்க ரகசிய சேவை பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்திய மதிப்பீட்டில் சுமார் ஏழரை கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தொழிலாளர் நலத்துறை மற்றும் சிறுதொழில் நிர்வாகத்துறை ஆகியவற்றின் தரவுகளை ஆய்விட்ட ரகசிய சேவை பிரிவினர் இந்த மெகா முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இழப்பீடு பெற தகுதியில்லாத ஏராளமானவர்களுக்கு முறைகேடாக நிதி வழங்கப்பட்டதன் மூலம் இந்த மெகா ஊழல் அரங்கேற்றப்பட்டுள்ளது. பெருந்தொற்று நிதி மோசடி தொடர்பாக 900- க்கும் மேற்பட்ட குற்றவியல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், மாநிலம் வாரியாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரகசிய சேவை அதிகாரிகள் கூறியுள்ளனர். முறைகேடாக வழங்கப்பட்ட பெரும்பாலான நிதியை பறிமுதல் செய்துள்ளதாக கூறியுள்ள அமெரிக்க அதிகாரிகள் ஊழல் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து