முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முககவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்க ஸ்பெயின் முடிவு

வியாழக்கிழமை, 23 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

மாட்ரிட், டிச : தெருக்களில் செல்லும் போது முககவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாக ஸ்பெயின் அரசு கூறியுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தின் இறுதியில் ஸ்பெயின் நாட்டின் தெருக்களில் கட்டாயமாக முககவசம் அணிவது ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க உள்ளது. ஸ்பெயின் தற்போது கொரோனாவின் 6-வது அலையை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற போதிலும் கொரோனா பாதிப்பின் விகிதமும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. ஸ்பெயின் நாட்டில் நேற்று முன்தினம் மட்டும் 27 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று ஒரு மாத காலத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஸ்பெயின் அரசு தெருக்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து