முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு இங்கிலாந்து மக்கள் அச்சம்

வியாழக்கிழமை, 23 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,06,122 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். 

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் புதிதாக 1,06,122 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,47,473 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது.

 

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 99 லட்சத்து 22 ஆயிரத்து 480 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 15,77,420 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை வழக்கம் போல கொண்டாடலாம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். 

இருந்தபோதும் கிறிஸ்துமஸ் முடிந்த பின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், தனது வழக்கமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து