முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்: போப்

வெள்ளிக்கிழமை, 24 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை ஆற்றி உள்ளார். அந்த உரையில் அவர் கார்டினல்கள், பிஷப்புகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு ஒரு செய்தி விடுத்துள்ளார்.  

அந்த செய்தியில் அவர், கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள். தற்பெருமை, தன்னலம், கவசத்தின் மினுமினுப்பு உங்கள் ஆன்மிக வாழ்க்கையை சிதைத்து தேவாலயத்தின் பணியை சீர்குலைத்து விடுகிறது என தெரிவித்துள்ளார். 

மேலும்,  தாழ்மை உள்ளவர்கள கடந்த காலத்தைப்பற்றி மட்டுமல்லாமல் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு முன்னோக்கி பார்க்கவும், தங்கள் கிளைகளை பரப்பவும், கடந்த காலத்தை நன்றியுடன் நினைவில் கொள்ளவும் தெரியும் எனவும் கூறினார்.

அதே நேரத்தில் பெருமிதம் உள்ளவர்கள் வெறுமனே திரும்பத் திரும்ப, கடினமாக தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அறிந்ததைப் பற்றி உறுதியாக நிற்கிறார்கள். புதியவற்றின் மீது பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களால் கடடுப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து