முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து, உ.பி.யிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

வெள்ளிக்கிழமை, 24 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் கடந்த 2-ம் தேதி முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.  அந்த வகையில்,மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இன்று முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது. மேலும்,திருமண விழாவில் 200 பேருக்கு மேல் பங்கேற்க தடை,ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்,ஒமைக்ரான் பரவலை தடுக்க தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதித்து உத்தரபிரதேச மாநில  ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து