முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைனில் வெளியிடப்பட்ட திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் 20 நிமிடத்தில் விற்று தீர்ந்தன

வெள்ளிக்கிழமை, 24 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருப்பதி : லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட தேவஸ்தான இணையதளம் சரி வர வேலை செய்யாததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 1 லட்சத்து 44 ஆயிரம் டிக்கெட்டுகளும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாட்கள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 2 லட்சம் டிக்கெட்டுகளும், 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 1.08 லட்சம் டிக்கெட்டுகள் என மொத்தம் 4.52 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் நேற்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்ட 20 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.

லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட தேவஸ்தான இணையதளம் சரி வர வேலை செய்யாததால் பக்தர்கள் அவதி அடைந்தனர். இன்று காலை 9 மணிக்கு 1 நாளைக்கு 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வீதம் ஒரு லட்சத்து 55 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இதேபோல் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக பக்தர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வழங்கப்படுகிறது. இதற்காக பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசன் விசுவாசம் மற்றும் வழிப்பறி ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து