முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மீண்டும் முன்னோக்கி செல்வோம் : மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

சனிக்கிழமை, 25 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : 3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் சற்று பின்வாங்கியுள்ள மத்திய அரசு, மீண்டும் முன்னோக்கி செல்லும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியிருப்பது விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய  அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓராண்டாக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்துக்கு பணிந்து 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 

இந்நிலையில் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 வேளாண் சட்டங்களில் சற்று பின்வாங்கி இருப்பதாகவும் மீண்டும் முன்னோக்கி செல்லும் என்றும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

வேளாண் சட்ட விவகாரத்தில் மீண்டும் மத்திய அரசு முன்னோக்கி செல்லும் என்று தோமர் கூறியிருப்பதால் மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்படலாம் என்று விவசாயிகள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. வேளாண் சட்டங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு புரிய வைக்க மத்திய அரசு பெரும் முயற்சிகள் மேற்கொண்டதாகவும், ஆனால் சில விவசாய சங்கங்கள் அதற்கு குறுக்கே நிற்பதாகவும் ஏற்கனவே தோமர் கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசி இருப்பது பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து