முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக பயணிக்கக்கூடாது: தலீபான்கள் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானில் 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே  கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.   தலீபான்களின் இந்த செயலுக்கு  உலக நாடுகளும் மனித உரிமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாக பயணிக்க தடை விதித்து தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொலைக்காட்சி சேனல்களில் பெண்கள் நடிக்கும் தொடர்களை ஒளிபரப்ப கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அரசு தடை விதித்தது. அதேபோல், தொலைக்காட்சியில் பங்கேற்கும் பெண் பத்திரிகையாளர்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து