முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் தென்பட்ட அரிய வகை நடக்கும் மீன்

ஞாயிற்றுக்கிழமை, 26 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஹோபர்ட் : ஆஸ்திரேலியாவில் இருக்கும்  டாஸ்மானியா தீவின் கடற்கரையில் மிக அரிய வகையான  ‘நடக்கும் மீன்’  22 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம்(சி எஸ் ஐ ஆர் ஓ) இந்த அழிந்து வரும் மீன் இனத்தை கண்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பிங்க் நிற மீன், முதன்முதலாக 1999-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு காலத்தில் அதிக அளவில் கடற்கரைகளில் தென்பட்ட இந்த மீன் இனம், பிற்காலத்தில் டெர்வெண்ட் கடற்கரை முகத்துவாரங்களில் மட்டும் தென்படும் வண்ணம் அதன் இனம் குறைந்து போனது.

2012ம் ஆண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  இந்த மீன் இனம் ஆபத்தான நிலையில் உள்ள அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

அதன்பின் எடுக்கப்பட்ட பாதுகாப்பு முயற்சிகளால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் இப்போது டாஸ்மானிய கடற்கரை பகுதிகளில் இந்த மீன்கள் தென்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய கடல் ஆராய்ச்சியாளர்கள், டாஸ்மான் கடல் பூங்காவில் நீருக்குள்ளே கேமராவை வைத்து இந்த அரிய வகை மீன் இனம் மீண்டும் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இந்த மீன் இனம் உயிரியலில் ஆங்லர்பிஷ் குடும்பத்தை சார்ந்தது. இந்த மீன் இனத்துக்கு பெயர் வர காரணம், அதன் உடலில் சிறிய கை போன்ற அமைப்புகள் உள்ளன. அவற்றை இந்த மீன்கள் கடல் படுகையில் நடக்க பயன்படுத்தும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து