முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டை வரவேற்க தயாராகும் உலகநாடுகள்: வண்ணக்கோலம் பூண்டுள்ள மாஸ்கோ நகரம்

திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்தாலும் எதிர்வரும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தைவான், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. ஒளி வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மகுடம் சேர்க்கும் வகையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ வண்ணக்கோலம் பூண்டுள்ளது. கண்களை பறிக்கும் வெளிச்சத்துடன் காணும் இடமெல்லாம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கிரெம்ளின் டவர், செஞ்சதுக்கம் உட்பட பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்விளக்கு வளைவுகளும், கிறிஸ்துமஸ் மரங்களும் பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளன.

தலைசிறந்த ரஷ்ய கலைஞர்களை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மின்னொளி விழாவில் சுமார் 4,000 விளக்கு  ஜாலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் 27 இடங்களில் வைக்கப்பட்டுள்ள விதவிதமான அலங்காரங்கள், மாஸ்கோ நகரை மாய உலகமாக மாற்றியுள்ளது. இரவை பகலாக்கிய ஒளி வெள்ளத்தில் மிதந்த பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். 14 நாட்களாக ஜொலிக்கும் மாஸ்கோ நகரில் உணவு பிரியர்களுக்கென பிரத்யேகமாக தற்காலிக கடைகளும் ஆங்காங்கே முளைத்துள்ளன. வெளிச்சக் கீற்றுகளில் ஒளிர்ந்து பளபளப்பாக மின்னிய பனிச்சறுக்கு பாதையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்கேட்டிங் செய்து உற்சாகத்தில் திளைத்தனர்.

மின் விளக்குகளை பிரதானமாக கொண்டு நடத்தப்படும் இவ்விழாவை குளிர் கால சீசன் முடியும் வரை நீடிக்க வேண்டும் என்பது கோரிக்கை. தைவானில் பல இடங்களில் தொடரும் கொண்டாட்டங்களில் சீன நாட்டினர் மட்டுமின்றி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து சென்றவர்களும் பங்கேற்றுள்ளனர். கிறிஸ்துமஸ் மரங்கள், கண்கவர் கட்டிடங்கள் என வண்ண விளக்குகளில் ஜொலித்தவற்றை ரசித்தவர்கள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து