முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைவாசிகளை வெளிநாட்டவர் திருமணம் செய்ய புதிய விதிமுறை ஜன-1 முதல் அமலுக்கு வருகிறது

செவ்வாய்க்கிழமை, 28 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

இலங்கையில், உள்ளூர் வாசிகளை திருமணம் செய்து கொள்ள விரும்பும் வெளிநாட்டினர், இலங்கை ராணுவ அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து, பல புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இலங்கை வாசிகளை மணம் முடிக்க விரும்பும் வெளிநாட்டினருக்காக அமல்படுத்தப்பட உள்ள ஒரு சட்டம், தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இது குறித்து, இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கை வாசிகளை, வெளிநாட்டினர் திருமணம் செய்து கொள்வதால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக, இலங்கை வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சக அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில், இலங்கை நாட்டினரை மணம் முடிக்க விரும்பும் வெளிநாட்டினர்,இலங்கை ராணுவ அமைச்சகத்திடம் இருந்து, ஆட்சேபனை இல்லை என்பதற்கான சான்றிதழை பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மேலும், கூடுதல் மாவட்ட பதிவாளர் வாயிலாக மட்டுமே, இது போன்ற திருமணங்களை பதிவு செய்யும் வகையில், இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு, எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து