முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 28 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

பிரேசிலில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 20 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

பிரேசில் நாட்டின் வடகிழக்கில் உள்ள பாஹியா மாநிலத்தில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள 2 அணைகள் முழுவதுமாக நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து பெயத மழையின் வந்ததால், வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. 

சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வசிக்கும் பாஹியா மாநிலத்தில், வெள்ள பாதிப்பு காரணமாக 72 நகராட்சிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 20 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாஹியா மாநிலத்தில் இவ்வளவு மோசமான வெள்ள பாதிப்பு இதுவரை ஏற்பட்டதில்லை என அம்மாநில கவர்னர் ரூயி கோஸ்டா தெரிவித்துள்ளார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து, மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் மீட்புப் பணிகள் முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து இதுவரை 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து