முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலை: முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்

புதன்கிழமை, 29 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி, பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக சட்டசபையிலும், மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வலியுறுத்தினோம். 

பெட்ரோல், டீசலை  ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலம், குறைந்தது 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என்றும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருட்கள் கிடைக்கும் என்றும், இதனால், தமிழகத்தில் சரக்கு போக்குவரத்துக் கட்டணம் குறைந்து அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறையும் என்றும் முதல்வர் கூறினார்.

ஆனால், நிதியமைச்சர் தியாகராஜன், பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு தனி மனித கருத்தை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று டி.ஆர். பாலு பதில் அளித்துள்ளார்.  திமுக-வின் மூத்த தலைவரான டி.ஆர். பாலுவே, பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்த நிலையில், தேர்தல் சமயத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது?. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து