முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர்களுக்கு பி.சி.ஆர். சோதனை முடிவுகள் கட்டாயம்: சார்ஜா அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 30 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

அரசுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் கொரோனா பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை கொண்டு செல்ல வேண்டும் என்று சார்ஜா மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து சார்ஜா மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சார்ஜா அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்காக செல்லும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தொற்று இல்லை என்ற பி.சி.ஆர் முடிவுகளை கையில் கொண்டு செல்ல வேண்டும். இதில் 2 டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 14 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர். முடிவுகளை எடுத்து செல்ல வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் 7 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை கையில் கொண்டு செல்ல வேண்டும். இதில் இரண்டும் இல்லாமல் தொலைத்தூரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தகுந்த காரணத்தை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களின் ஆண்டு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து