முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வியாழக்கிழமை, 30 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்த உதவும் நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். 

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், ஒரு மாத காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பும் தன்மையை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.  இந்த நிலையில், ஒமைக்ரான் வைரசை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருளை (ஆன்டிபாடி) அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஒமைக்ரானை மட்டுமல்லாது உருமாறிய பிற வைரஸ்களை தடுப்பதற்கும் இந்த நோய் எதிர்ப்பு பொருள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழக மருத்துவ கல்லூரி பேராசிரியர் டேவிட் வீஸ்லர் இதுபற்றி கூறும் போது, 

ஸ்பைக் புரதத்தில் மிகவும் பாதுகாக்கப்பட்ட தளங்களை குறிவைக்கும் ஆன்டிபாடிகளில் (நோய் எதிர்ப்பு பொருள்) கவனம் செலுத்தி, வைரசின் தொடர்ச்சியான பரிணாமத்தை கடக்க ஒரு வழி இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்பு சொல்கிறது என குறிப்பிட்டார்.  இந்த கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வு தகவல்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து