முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரான் பாதிப்பு; உலகம் முழுவதும் ஒரே நாளில் 2,800 விமானங்கள் ரத்து

வெள்ளிக்கிழமை, 31 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 2,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும்  உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டாவும், ஒமைக்ரானும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த நிலையில் நேற்று முன்தினம் மட்டும்  ஒமைக்ரான் தொற்று பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 2,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 12,000 விமானங்கள்  தாமதமாகியுள்ளன. வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் விமான நிலைய பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ள காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து ஜெட் புளு விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாவது :

நாளை ஜனவரி 2-ம் தேதிக்கு முன்னர் பயணிகள் மேற்கொள்ள இருக்கும் அத்தியாவசிய பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இனி வரும் நாள்களில் அமெரிக்காவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து