முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருங்காலத்தில் பாகிஸ்தானை சுனாமி தாக்கும் ஆபத்து உள்ளது: நிபுணர்கள் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 31 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

பாகிஸ்தான் நாட்டை வருங்காலத்தில் சுனாமி தாக்க கூடிய பேராபத்து உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

அதிக நிலநடுக்க பாதிப்புகள் ஏற்படக் கூடிய பகுதியில் பாகிஸ்தான் அமைந்துள்ளது.  கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அங்கு 4,039 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.  இதே போன்று சுனாமி, புயல்கள் மற்றும் கனமழை போன்ற பாதிப்புகளும் ஏற்பட கூடிய நாடாக பாகிஸ்தான் உள்ளது.  கடந்த 1945-ம் ஆண்டு பாகிஸ்தானின் கடலோரம் மற்றும் ஈரான், இந்தியா மற்றும் ஓமன் நாடுகளை சுனாமி தாக்கியதில் 4 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம், ஐ.நா. வளர்ச்சி திட்டத்துடன் இணைந்து நடத்திய நிகழ்வில்,  

பாகிஸ்தானில் சுனாமி பேரிடர் ஏற்பட கூடிய ஆபத்து உள்ளது.  குவாடர் துறைமுகம் மற்றும் அந்த நகரம் சுனாமியால் நீரில் மூழ்க கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  கராச்சி நகரில் ஒன்று முதல் 2 கி.மீ. வரையிலான கடலோர பகுதிகள் பாதிப்படைய கூடும்.  சிந்து கடலோர பகுதியும் சுனாமி அச்சுறுத்தலுக்கான இலக்காக உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து