முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவிடம் இருந்து 25 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்

வெள்ளிக்கிழமை, 31 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

சீனாவிடம் இருந்து 25 அதிநவீன ஜே-10சி ரக போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது. 

ராவல்பிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, 2022, மார்ச் 23-ம் தேதியன்று நடைபெறும் பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியில், சீனாவின் 25 ஜே-10சி ரக போர் விமானங்கள் இடம்பெறும்  என தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்துள்ளது.  இதனால், தனது ஆதரவு நாடான சீனாவிடம் இருந்து 25 அதி நவீன ஜே-10சி ரக போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து