முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் பூர்வகுடிகள் போராட்டத்தில் பதட்டம்: பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைப்பு

வெள்ளிக்கிழமை, 31 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஆஸ்திரேலியாவில் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அருங்காட்சியமாக இருக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தீ வைக்கப்பட்டபோது 20-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர். நிலைமையை உணர்ந்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர் பிழைத்தனர். 

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் பழைய நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்திற்கு பூர்வகுடிகளின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தத் திரண்டனர். தங்களின் இறையாண்மைக் காக்க வேண்டும் என்பது தான் பூர்வக்குடிகளின் நீண்ட நாள் போராட்ட கோரிக்கையாக இருக்கிறது. கடந்த 15 நாட்களாகவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் ஸ்காட் மாரிஸன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய பூர்வக்குடிகள் நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னர் டென்ட் தூதரகம் அனைத்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இதனை நினைவுகூரும் வகையிலேயே போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆகியும் தங்களின் இறையான்மை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதே அவர்களின் ஆதங்கமாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து