முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று பரவல் எதிரொலி: திருப்பதியில் புத்தாண்டு விசே‌ஷ பூஜைகள் ரத்து

வெள்ளிக்கிழமை, 31 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

கொரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதியில் புத்தாண்டு விசே‌ஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று நேரடியாக வழங்கப்பட இருந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 10-ம் தேதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி விசே‌ஷ பூஜைகள் பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக விசே‌ஷ பூஜைகள், கூடுதலாக பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது ரத்து செய்யப்பட்டன.

வழக்கம்போல் ஏழுமலையானுக்கு அதிகாலை 4 மணிக்கு நடைபெறும் திருப்பாவை, தோமாலை உள்ளிட்ட சேவைகள் நடைபெறுகிறது. இதையடுத்து வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். காலை 9 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கம்போல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி மாதத்திற்கான ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதேபோல் கடந்த 27-ம் தேதி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஜனவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் உள்ளூர் முகவரி கொண்ட ஆதார் அட்டை உள்ள பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இன்று காலை திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி உட்பட 5 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுக்கள் வழங்கப்பட இருந்தது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று நேரடியாக வழங்கப்பட இருந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 10-ம் தேதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் உள்ளூர் பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற வந்திருந்தனர். டிக்கெட்டுகள் 10-ம் தேதி வழங்கப்படும் என தேவஸ்தான ஊழியர்கள் கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து