முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோவில் நடை திறப்பு

வெள்ளிக்கிழமை, 31 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சபரிமலை : மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டது.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மண்டல, மகரவிளக்கு காலத்தை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கடந்த 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 31-ந்தேதி முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

எருமேலியில் பக்தர்கள் உடனடி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. எருமேலி கோழிக்கடவில் இருந்து காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், அழுதக்கடவு, முக்குழியில் இருந்து காலை 7 மணி முதல் பகல் 12மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு அய்யப்ப பக்த குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி ஜனவரி 11-ந்தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து 12 ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதியன்று நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது, 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து