முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிகோணமலை எண்ணை கிடங்கு ஒப்பந்தம் இந்தியாவுக்கு நீட்டிப்பு : இலங்கை அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 1 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

கொழும்பு : திரிகோணமலை துறைமுகத்தில் எண்ணை கிடங்கு பராமரிப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு மேலும் 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது அமைக்கப்பட்ட 99 எண்ணை கிடங்குகளை இந்தியாவை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் பராமரித்து பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் இலங்கை அரசு கடந்த 2003-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.  இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் உதயபிரபாத் கம்மன்பில திடீரென அறிவித்தார்.

இந்த நிலையில் இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவிடம் இருந்து கடனுக்கு எண்ணை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு ஈடுபட்டது.  இதன் தொடர்ச்சியாக திரிகோணமலை துறைமுகத்தில் எண்ணை கிடங்குகளை பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு மீண்டும் வழங்க இலங்கை அரசு முடிவு செய்தது. 

இந்த நிலையில் திரிகோணமலை துறைமுகத்தில் எண்ணை கிடங்கு பராமரிப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு மேலும் 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அமைச்சர் உதயபிரபாத் கம்மன் பிலே கூறுகையில், 

திரிகோணமலை துறைமுகத்தின் புதிய ஒப்பந்தம் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் அடுத்த வாரம் கையெழுத்தாகிறது. எண்ணை கிடங்குகள் பராமரிப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு மேலும் 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. 99 எண்ணை கிடங்குகளில் 14 கிடங்குகளை இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மீதமுள்ள 61 எண்ணை கிடங்குகள் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவை இணைந்து நிர்வகிக்கும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து