முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி : ஈரான் மீண்டும் தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

டெக்ரான் : ஈரான் கடந்த வியாழக்கிழமை ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தியது. ஆனால், அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோளை புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015-ம் ஆண்டு ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.  இந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிட்டால், அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளும் என்பதே ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சிக் காலத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு பின்னர் அங்கு ஜனாதிபதியாக வந்த டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவர் 2018-ம் ஆண்டு அறிவித்தார். அதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கிடையில், விண்வெளி திட்டங்களை நிறைவேற்றுவதில் ஈரான் ஆர்வம் காட்டுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஈரான் ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஆனால் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஜாபர் என்ற செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்த முடியாமல் தோல்வியடைந்து விட்டது. இப்படி சமீப காலத்தில் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி ஈரான் தோல்விகளைத்தான் தொடர்ந்து சந்தித்து வருகிறது.

இதனை தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை 3 சாதனங்களுடன் கூடிய ஒரு செயற்கைக்கோளை பீனிக்ஸ் என்ற புதிய ராக்கெட் மூலம் ஈரான் விண்ணில் செலுத்தி உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுமா? என்பதில் கேள்வி நிலவி வந்தது. இந்நிலையில், செயற்கைக் கோளை பூமி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சியில் ஈரான் மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

செயற்கைக்கோளுடன் பூமி சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைய நொடிக்கு 7,600 மீட்டர் வேகத்தில் செல்லவேண்டிய சூழ்நிலையில் ராக்கெட் 7,350 மீட்டர் வேகத்தில் மட்டுமே சென்றுள்ளது. இதனால், செயற்கைக்கொளை ராக்கெட்டால் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்த முடியாமல் முயற்சி தோல்வியடைந்து விட்டது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து