முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டனில் 18 பேரை கடித்த "அணில்" கருணைக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : பிரிட்டனில் 18 பேரை கடித்த அணில் கருணை கொலை செய்யப்பட்டது. 

பிரிட்டனில் அணில் ஒன்று மனிதர்களை தாக்கிய வினோத சம்பவம் நடந்துள்ளது. பிளின்ட்ஷயரில் உள்ள பக்லியில் ஒரு சாம்பல் அணில், இரண்டு நாட்களாக போக்கு காட்டி வந்த நிலையில் 18 நபர்களை கடித்துள்ளது.

உள்ளூர் மக்களால் ஸ்ட்ரைப் என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த அணிலை பற்றி கொரின் ரெனால்ட்ஸ் என்பவர் கூறும் போது, 

இந்த ஸ்ட்ரைப் எனது தோட்டத்திற்கு தானியங்களை தின்று விட்டு செல்லும். முதலில் என்னை எந்த தொந்தரவும் செய்யவில்லை. ஒரு நாள் திடீரென அது என்னை கடித்தது. அதன் கடியால் எனக்கு ரத்தம் வந்தது என்று கூறினார்.

மற்றொருவர் கூறும்போது, ஸ்ட்ரைப் என்னைக் கடித்ததுடன், என் நண்பனையும் தாக்கியது. மேலும் பலரைத் தாக்கியது. என் வீட்டை விட்டு வெளியே செல்ல பயமாக உள்ளது. நான் ஸ்ட்ரைப் கடித்ததை சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார். இந்த அணிலானது அப்பகுதியில் மட்டும் 18 பேரை கடித்துள்ளது.

இறுதியில் இந்த அணில் கால்நடை மருத்துவரால் பிடிக்கப்பட்டது. இதனை காட்டுக்குள் விடுவது சட்டப்பட்டி குற்றம் என்பதால், கருணைக் கொலை செய்யப்பட்டது.  பிரிட்டன் பூச்சிக் கட்டுப்பாட்டு சங்கத்தின் கூற்றுப்படி, சாம்பல் அணில்கள் ஒரு ஆக்ரோஷமான இனமாகும். இது 1870-களில் வட அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டது. இறுதியில் அவை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் அழிவு மற்றும் மனிதர்களை கொடூரமாக தாக்கும் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு பிரிட்டன் அரசாங்கம் இதனை காடுகளுக்குள் விடுவதை தடை செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து