முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை விமர்சனம்

திங்கட்கிழமை, 3 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

நுஃபைஸ் ரகுமான் தயாரிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை. இயற்கை ஒலிகளை பதிவு செய்யும் பணிக்காக,  காடு மலைப் பகுதிகளுக்கு செல்பவர் நாயகி சுபிக்ஷா. அவருக்கு உதவியாக உடன் செல்பவர் தான் நாயகன் ருத்ரா. பணியின் போது அவர்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகள் மோதல்கள் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது . அந்தக் காதலுக்கு வில்லனாக ஏற்கனவே நாயகிக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை குறுக்கே வர, கதை சூடு பிடிக்க, பிறகு என்ன நடந்தது என்பதே கிளைமாக்ஸ். வித்தியாசமான கதைக் கருவைப் கொண்டு  சுவாரஸ்யமாக படத்தை கொடுத்ததில் இயக்குனருக்கு பாராட்டுக்கள். படத்தின்  பலம்  தலைப்பும் கதைக் கருவும் . அடுத்தது லொக்கேஷன்கள் . ருத்ரா உற்சாகமாக நடித்திருக்கிறார். அவரே அவருக்கு கொடுத்துள்ள பின்னணி குரலில் அதீத மலையாள நெடி. நாயகி சுபிக்ஷா தத்ருபமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காடு, மலை, அருவிகளில் உள்ள இயற்கை ஒலிகளை பதிவு செய்தவர்கள் அவற்றில் கொஞ்சத்தை கதையிலும் சேர்த்திருந்தால் படம் இன்னும் வரவேற்கப்பட்டு இருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து