முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் - திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 3 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

அஜித் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிட்டிசன்’, ஷாம் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஏபிசிடி’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய சரவண சுப்பையா 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது மூன்றாவதாக இயக்கியிருக்கும் படம் மீண்டும். நாயகன் கதிரவனும், நாயகி அனகாவும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் மீறி, திருமணம் செய்து கொள்கிறார்கள். அனகா கர்ப்பமாக இருக்கும்போது, கதிரவன் ‘அண்டர்கவர் ஆபரேஷன்’ எனப்படும் ரகசிய உளவுப்பணி காரணமாக வெளியூர் போகிறார். பல நாட்களாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அனகாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அதே நேரம் அனகாவுக்கு சரவண சுப்பையாவுடன் இரண்டாவது திருமணம் நடக்கிறது. இந்நிலையில் திரும்பி வருகிறார் கதிரவன். தனது மனைவியின் நிலை அறிந்து கதறுகிறார். ஆசிரமத்தில் வளரும் தன் மகனைக் கண்டுபிடித்து தன்னுடன் வளர்த்து வருகிறார். மீண்டும் ‘அண்டர்கவர் ஆபரேஷனுக்கு அழைப்பு வர  மகனை அனகாவிடம் விட்டுவிட்டு செல்கிறார், கடைசியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கிளைமாக்ஸ். ‌‌‌‌‌கதையின் முதல் நாயகனாக வரும் கதிரவன் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் குழந்தைக்கும் இடையிலான பாசப்பிணைப்பு நெகிழ்ச்சி ஊட்டுகிறது. இரண்டாவது நாயகனான சரவண சுப்பையா பெருந்தன்மையும், பரந்த மனப்பான்மையும் கொண்ட நல்ல கணவனாக திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி அனகாவும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதிரவனின் குடும்ப வாழ்க்கையும், வேலையும்  ஒன்றுக் கொன்று ஒட்டாமல் இருப்பதால் நாமும் ஒன்ற இயலவில்லை மற்றபடி ’மீண்டும்’ படம் – மீண்டும் பார்த்து ரசிக்கலாம்!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து