முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மணிக்குறவர் விமர்சனம்

திங்கட்கிழமை, 3 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ஜி.காளியப்பன் தயாரிப்பில் ராஜ ரிஷி இயக்கி இருக்கும் படம் மதுரை மணிக்குறவர். ஹரிகுமார், மாதவி லதா, சரவணன், சுமன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மதுரை மார்க்கெட்டில் அநியாயமாக  வட்டி வசூலிக்கும் மணி என்பவரை தண்டிக்கிறார் ஹரி குமார். இதனால் சாராய வியாபாரியான சரவணனையும், எம் எல் ஏ சுமனையும் பகைத்துக் கொள்ளும் நிலை உருவாகிறது. அதே நேரத்தில் ஹீரோ ஹரிகுமாருக்கு திடீர் திருமணமும் நடக்கிறது. அதன் பிறகு ஹரிகுமாரின் வாழ்க்கையிலும் சமூகத்திலும் என்ன நடந்தது என்பதே மதுரை மணிக்குறவர் படத்தின் கதை. படத்தின் தொடக்கத்தில் இளையராஜா தோன்றிப் பாடும் மதுரையின் புகழ் பாடும் பாடல் அருமை. 80, 90 களுக்கே நம்மை அழைத்துச் செல்லும் உணர்வு ஏற்படுகிறது. தண்டல் வாங்கி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இரு பெண்கள், சண்டை, கலாட்டா, பகை, சாப்பாடு என படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து மண் வாசனை வீசுகிறது. இப்படத்தில் பெண்கள் மறுமணத்துக்காக  குரல் கொடுத்திருப்பதைப் பாராட்டலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து