முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீர்ப்புகள் விற்கப்படும் விமர்சனம்

திங்கட்கிழமை, 3 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

நீண்ட இடைவேளைக்கு பிறகு சத்யராஜ் நாயகனாக நடித்துள்ள படம் தீர்ப்புகள் விற்கப்படும். மருத்துவ  அறுவை சிகிச்சை நிபுணரான சத்யராஜ், வில்லன் மதுசூதனனின் மகனை கடத்தி அவரின் முக்கிய உறுப்பை அறுத்து வைத்துக்கொண்டு அவனை விடுவிக்க 4 கோடி கேட்கிறார். இதையடுத்து வில்லன் மதுசூதனன் சத்யராஜை வலைவீசி தேடுகிறார். இறுதியில் வில்லன் மகனுக்கு அந்த உறுப்பு கிடைத்ததா? சத்யராஜ் ஏன் அதை வெட்டினார் என்பதே படத்தின் மீதி கதை. ரேப்பிஸ்டுகளின் பிறப்புறுப்பை வெட்டுவது மட்டுமே அவர்களுக்கான சரியான தண்டனை என்ற கருத்தின் மூலம் படத்தை தெளிவாக கையாண்ட இயக்குநருக்கு பாராட்டுக்கள். சத்யராஜ் ஆர்ப்பாட்டமில்லாத அமைதி நாயகனாக நடித்து கைத்தட்டல் பெறுகிறார். சத்யராஜின் மகளாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் தேர்வாகி இருக்கிறார். சார்லி சிறப்பான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். ஆஞ்சியின் ஒளிப்பதிவும் பிரசாதின் பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்துள்ளது. பாலியல் குற்றங்களுக்கான தண்டனை குறித்து விவாதிக்கும் இப்படம் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் இது விழிப்புணர்வப் பாடமாக மாறி இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து