முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கின்னஸுக்கு களம் இறங்கும் நடிகர் திலீபன்

திங்கட்கிழமை, 3 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

பள்ளிக்குடம் போகமாலே, எவன் போன்ற படங்களில் நடித்த நாயகன்  திலீபன் புகழேந்தி, கின்னஸ் பைக் ரேஸிங்கில் மீண்டும் ஈடுபடவுள்ளார். இவர் மறைந்த கவிஞர் புலமைபித்தனின் பேரனும் பிரபல தயாரிப்பாளர் புகழேந்தியின் மகனுமாவார். இவர் 2009 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்ட போது  விபத்துள்ளானார்.  தற்போது உடல் நலம் நன்கு தேறி சாகவரம் எனும் சைக்கோ திரில்லர் திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் கின்னஸ் சாதனைப் படைக்க களம் இறங்கி இருக்கிறார். இம்மாதம் 12 ஆம் தேதி, 13 கிலோ மீட்டர் தூரம் ஒற்றை சக்கரத்தில் தீ வைத்துக்கொண்டு, பைக் வீலிங்கை கின்னஸ் நடுவர்கள் முன்னிலையில் செய்ய உள்ளார். இவர் ஏற்கனவே தமிழ்நாடு பைக் ரேஸிங்கில் வெற்றி பெற்று சாம்பியனானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து