முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெய் ஆகாஷ் நடித்து இயக்கும் அமைச்சர்

திங்கட்கிழமை, 3 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

போலீஸ் பயிற்சி முடித்த ஒரு இளைஞன் காலச் சூழலில் மாநிலத்தின் உள்துறை அமைச்சராகிறார். தன் வசத்தில் உள்ள காவல் இலாகாவை பயன்படுத்தி மூத்த குடிமக்களுக்கு நன்மையும், சமத்துவத்தையும் கொடுக்கிறார். இப்படிப்பட்ட அமைச்சரின் வாழ்க்கையில் மலரும் காதல் பற்றிய படமே அமைச்சர் படத்தின் கதை. கதாநாயகனாக ஜெய் ஆகாஷ், கதாநாயகியாக  அட்சயா கண்டமுத்தன் அறிமுகமாகிறார். மேலும் விஜயகுமார், தேவிகா, பிர்லாபோஸ், ஸ்ரேவன், மைக்கேல் அகஸ்டின், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் , திருத்தணி , சென்னை அதன் சுற்றுப்புறங்களில்  படமாக்கப்பட்டுள்ளது. இசை தேவா. தற்போது அனைத்து கட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில் விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து