முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிலீஸை அறிவித்த பீஸ்ட் படக்குழு

திங்கட்கிழமை, 3 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.  இப்படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ்  தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.  இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி,'பீஸ்ட்' படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பீஸ்ட் படத்தின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து