முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் ஸ்டாலினுக்கு தொழிலாளர்கள் நன்றி

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்தமைக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு தொழிற்சங்கத்தினர்  நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 30.12.2021 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும் போது,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியக்கூடிய பட்டியல் எழுத்தருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஊதியத்தை ரூ.5285 ஆகவும், உதவியாளர்களுக்கு, காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை ரூ.5218 ஆகவும் உயர்த்தி, அகவிலைப்படித் தொகை ரூ.3499 சேர்த்து வழங்கிட ஒப்புதல் அளித்தார். மேலும், இங்கு பணிபுரியக்கூடிய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூலித் தொகையை மூட்டை ஒன்றுக்கு ரூ.3.25லிருந்து 10 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளித்தார். அதுமட்டுமின்றி பருவகால பட்டியல் எழுத்தர், உதவியாளர் மற்றும் காவலர்களுக்கு போக்குவரத்துப்படியும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.  

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  சண்முகம், பொருளாளர் நடராசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் மாநிலத் தலைவர் பேச்சிமுத்து, பொதுச் செயலாளர் வள்ளுவன் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர்  சந்திரகுமார், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர்  சாமிக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, ஊதிய உயர்வு அளித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது, அமைச்சர் சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்  டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து