முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. எம்.எல்.ஏ.வை தொடர்ந்து அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கும் 'கொரோனா'

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (5-ம் தேதி) தொடங்க உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் பரிசோதனை செய்துகொண்ட பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்த நிலையில் அவரைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து