முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்நிலைய கொள்ளைச் சம்பவத்தில் திடீர் திருப்பம்: சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் திருட்டில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்: கொள்ளை நடந்ததாக நாடகமாடியது அம்பலம்

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

திருவான்மியூா் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டரில் திங்கள்கிழமை அதிகாலையில் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பணத்தை திருடிவிட்டு, கொள்ளைச் சம்பவம் நடந்ததாக ரயில்வே ஊழியர் நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டிக்கெட் கவுன்டருக்குள் புகுந்த மர்ம நபர்கள், துப்பாக்கியைக் காட்டி, கட்டிப்போட்டு பணத்தைக் கொள்ளையடித்ததாகக் கூறிய ரயில்வே ஊழியர், கொள்ளைப் போன பணத்தை தனது மனைவியை, ரயில் நிலையத்துக்கு வரவழைத்து, கொடுத்தனுப்பியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பின் ரயில்வே ஊழியர் டீக்கா ராமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவான்மியூா் ரயில்நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு டிக்கெட் எடுப்பதற்காக, தரை தளத்தில் உள்ள கவுன்ட்டரில் காத்திருந்தனா். வெகு நேரமாகியும் டிக்கெட் கவுன்ட்டா் திறக்கப்படாததால், ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனா்.

ரயில்வே காவலர்கள் உள்ளேச் சென்று பார்த்தபோது, டிக்கெட் கவுன்ட்டா் ஊழியா் டீக்காராம் மீனா (28), கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். ஊழியரை விடுவித்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முகமூடி அணிந்த 3 மா்ம நபா்கள் துப்பாக்கி முனையில் கட்டிப்போட்டு, பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாகத் தெரிவித்தார். 

ரயில்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி, காவல் கண்காணிப்பாளா் அதிவீரபாண்டியன், சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்புப்படை ஆணையா் செந்தில் குமரேசன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து ரயில்வே ஊழியரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், கொள்ளைபோனதாக, ரயில்வே ஊழியர் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாகவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனதால் வேறு வழியின்றி தனது மனைவியுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து